அதினதின் காரியங்கள் அதினதின் காலத்திலே

 

 

அதினதின் காரியங்கள் அதினதின் காலத்திலே

நேர்த்தியாக செய்திடுவாரே நிச்சயமாய் செய்திடுவாரே  (2)

 

     சோர்ந்து போகாதே எந்தன் மகனே

     சோர்ந்து போகாதே எந்தன் மகளே  - அதினதின்

 

அழ ஒரு காலமுண்டென்றால்

நகைக்கவும் நாட்கள் வந்திடுமே (2)

புலம்பல் யாவும் நீக்கியே

நடனம் ஆடச்செய்வாரே (2)  -  சோர்ந்து போகாதே

 

நிந்தையின் நாட்களுண்டென்றால்

நேசிக்கும் காலம் வந்திடுமே  (2)

வெட்கங்கள் யாவும் மாறுமே

மகிழ்ந்து துதிக்கச் செய்வாரே  (2) - சோர்ந்து போகாதே

 

இழக்க காலமுண்டென்றால்

சேர்க்கும் வேளை வந்திடுமே  (2)

தோல்விகள் யாவும் நீக்கியே

களிகூர்ந்து மகிழச்செய்வாரே  (2)  - சோர்ந்து போகாதே